2003ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட வைதிகஸ்ரீ மாத இதழின் பதினோராம் ஆண்டு இந்த இதழில் துவங்குகிறது, பத்து வருஷம் ஒரு (வைதிக)பத்திரிக்கையை இடைவிடாமல் நடத்துவது என்பது தனி மனிதனாக ஸாதிக்கும் செயலல்ல, எந்த செயலையும் நிறைவேற்ற மனித முயற்சியுடன் தெய்வ அனுக்ரஹமும் தெய்வ அனுக்ரஹத்தை பெற்றுத் தரும் ஆசார்யர்களும் மஹான்களுமே காரணம்,

ஆஸ்திக ஸமூஹம் நம் தார்மிகமான முயற்சிக்கு எப்போதும் உறுதுணையாக நிற்கும், ஒருபோதும் கை விடாது என்பதற்கு வைதிகஸ்ரீயின் வாசகர்களே தக்க உதாஹரணம்,

உன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களைக் கொண்டே, விஷயங்களை சேகரித்தல், டைப் அடித்தல், ப்ரூப் பார்த்தல் ,ரசீது தருதல்போன்ற லௌகிக காரியங்களைச்செய்து வைதிகஸ்ரீயை குடும்பப் பத்திரிக்கையாக நடத்தி தர்மங்களை மக்களிடம் பரப்பு, நான் பூரணமாக ஆசீர்வதிக்கிறேன், என்று ஸுமார் 10 வருஷங்களுக்கு முன்பு ஆசீர்வதித்த பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அவர்கள் சென்ற 08-07-2013 திங்களன்று வைதிகஸ்ரீ அலுவலகத்திற்கு ஸ்ரீ ரங்கஜியுடனும் ஸ்ரீ நீலபால சர்மாவுடனும் வந்து ஆசிரியர் குடும்பத்தினரையும் ஸ்ரீ ஸீதாராம குருகுல வேதபாடசாலை மாணவர்களையும் ஆசீர்வதித்தார்கள்,

அத்துடன் வைதிகஸ்ரீக்கு சிற்சில இடையூறுகள் ஏற்படுகிறது என்றதும் தர்மம் காப்பாற்றும் எப்போதும் நாங்கள் வைதிகஸ்ரீக்கு உறுதுணையாக இருப்போம், தர்மமே வெல்லும், என்று உத்ஸாகமளித்தார், அனைத்து மஹான்களின் ஆசியுடனும் வைதிக தர்மத்தில் பிடிப்புள்ள வாசகர்களின் ஆதரவுகளுடனும் வைதிகஸ்ரீயானது இடைவிடாது வைதிக தர்ம பிரசாரம் செதிட வாசகர்களும் மஹான்களும் தொடர்ந்து ஆதரவளிக்க ஸ்ரீ பகவான் பூரணமாக அனுக்ரஹிக்கட்டும்

Back