Publications - பித்ரு கர்மாக்கள் - ச்ராத்தம் - தர்ப்பணம்

மனிதராகப்பிறந்த அனைவரும் தங்களுடைய முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமை (கடன்)  பட்டிருக்கிறார்கள்,இதையே வேதம் பித்ருருணம் என்கின்றது, 

ஒவ்வொருவரும் பெற்றோர் ஜீவதசையில்(உயிருடன்) இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்ய வேண்டும், ஆனாலும் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பிள்ளைகள்தான் அவர்களை போஷிக்க வேண்டும் என்பதில்லை, அவர் தானாகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார், அல்லது மற்ற உறவினர்கள் நண்பர்கள் முதலியவர்களாலும் காப்பாற்றப்பட்டு விடுவார், 

ஆனால் பெற்றோர் இறந்த பின்னர் பித்ருக்களாக மாறிய அவருக்கு பெற்ற பிள்ளைகள்தான், முறையாக சிராத்தம் தர்ப்பணம் செது உணவளித்து பசி தாஹத்தைப் போக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக (ரத்த ஸம்பந்தமில்லாத) யாரோ ஒருவர் சிராத்தம் தர்ப்பணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை, 

ஆகவே பிள்ளைகள், பெற்றோர் மனிதராக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையை விட பெற்றோர் இறந்த (பித்ருக்களான) பின்பு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் போன்ற கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும். இந்தக்கருத்தையே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் 

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கம் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 

என்கிறார், இங்கே பித்ருக்களை வள்ளுவர் தென்புலத்தார் (தெற்கு திசையில் இருப்பவர்) என்று குறிப்பிடுகிறார், பித்ருக்களைப்பற்றியும் பரலோகத்தைப்பற்றியும் விவரிக்கும் நமது சாஸ்திரங்களில் முழுமையான சிரத்தை (நம்பிக்கை)யுடன் செய்ய வேண்டிய கர்மா என்பதால் பித்ரு கர்மாக்களுக்கு சிராத்தம் எனப்பெயர். 

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பேப்பர் வடிவான தபால்களை அனுப்ப, முகவரியை ஸரியான முறையில் பின்கோட்டுடன் அதற்கான இடத்தில் எழுத வேண்டும், குறிப்பிட்ட அளவு தொகை செலுத்த வேண்டும், தபாலை அதற்கான பெட்டியில்தான் போட வேண்டும் போன்ற பற்பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன, அதைப்போலவே ஸுமார் 84 லக்ஷம் யோஜனைக்கு அப்பால் வஸிக்கும் நமது பித்ருக்களுக்கும் இங்கே மந்திரங்கள் சோல்லி செய்யப்படும் சிராத்தம் தர்ப்பணம் முதலியவை சென்றடைய சாஸ்திரங்களில் சில விதிமுறைகள் இருக்கின்றன, நமது முன்னோர்கள் கடைபிடித்த அந்த சிராத்த-தர்ப்பண விதிமுறைகளை நாமும் தெரிந்துகொண்டு கடைபிடிக்க வேண்டும்.

தற்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்கும் அந்தந்த குடும்பத்தில் செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை(முறையாக) செய்யாததும் ஒரு காரணம், தெய்வங்களை விட அதிக சக்திவாந்த பித்ருக்களின் ஆசியால் அனைத்தையும் அடைய முடியும் . 

நாகரீகமான சூழ்நிலையிலும் கூட சாஸ்திர வாக்கியங்களில் நம்பிக்கையுடன் பித்ருகர்மாக்களைச் செய்து வருபவர்களுக்கு உதவியாக, அவர்கள் மனதில் -நாம் செய்யும் செயல் ஸரிதான்- என்னும் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக, வைதிகஸ்ரீ பத்திரிக்கையில் பித்ருபூஜனம் கட்டுரை வெளியிடப்படுகிறது 

தற்சமயம் அவற்றை, குறிப்பாக ப்ராஹ்மணர்கள் செய்ய வேண்டிய பித்ருகர்மாக்களைத் தொகுத்து இந்த புஸ்தகத்தை வெளியிடுகிறோம், அனைவரும் இதிலுள்ள கருத்துக்களை படித்து பயனடைய ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

 

 1. ஸ்ரீ ராமர் செய்த பித்ரு காரியங்கள்

 2. பெற்றோர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாத மகன் என்ன செய வேண்டும்?

 3. பித்ரு கர்மாவில் யார் முன்னால்?யார் பின்னால்? 

 4. பீஷ்மர் தந்தைக்கு செத சிராத்தம்

 5. கனவில் தோன்றும் முன்னோர்கள்:

 6. பித்ருக்களா?-தெய்வங்களா? யாருக்கு முதலில்?

 7. பித்ருக்களுக்கான நாட்கள்-96

 8. அமாவாஸையும் பித்ருக்களும் 

 9. அஷ்டகா சிராத்தம்

 10. யுகாதி எனப்படும் நான்கு நாட்கள்?

 11. மன்வாதி பதிநான்கு நாட்கள்? 

 12. மாதப்பிறப்பு -ஸங்க்ரமணம் என்றால் என்ன? 

 13. மாதப்பிறப்பன்று என்ன செய்ய வேண்டும்? 

 14. மாதங்கள் எந்த நேரங்களில் பிறக்கின்றன?

 15. பித்ருக்களுக்கு தர்பணம் எப்போது?

 16. புண்ணியகால நேரங்கள் எப்போது?:

 17. மாதப்பிறப்பின் பெயர்களும்-புண்யகாலமும் 

 18. புண்ணியகால நேர நிர்ணயம்: 

 19. இரவில் மாதம் பிறந்தால் புண்யகாலம் எப்போது?

 20. சாஸ்திரங்களில் பகல்-இரவு கணக்கிடும் முறை

 21. நடு இரவு என்பது எந்த நேரம்?

 22. சிராத்தம் செய்யும் நாளின் சிறப்பு:

 23. வீட்டு வாசலில் காத்திருக்கும் முன்னோர்கள் 

 24. வீட்டின் சூழ்நிலை-மனிதர்களின் குணம்-மாறுபடும் 

 25. சிராத்த நாளை எவ்வாறு தெரிந்து கொள்வது? 

 26. பகலின் பகுதிகளும் -நேரங்களும் பெயர்களும் 

 27. ச்ராத்த நாட்களை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்?

 28. திதிவ்ருத்தி,-திதிக்ஷயம் என்றால் என்ன?

 29. சிலர் மரணத்தில் நாட்கள் கணக்கிடுவதில் மாறுதல் 

 30. சிராத்தம் செயாவிடில் ஏமாற்றமடையும் பித்ருக்கள் 

 31. ஹோமம் - சாப்பாட்டுடன்தான் செய்ய வேண்டுமா? 

 32. சிராத்தம் செய்வதால் யார்யாருக்கெல்லாம் திருப்தி?

 33. இறந்தவருக்கு இரண்டு பெயர்கள்:

 34. ஏகோத்திஷ்ட ச்ராத்தம்: 

 35. பார்வண ச்ராத்தம்: 

 36. நித்ய நைமித்திக காம்ய சிராத்தங்கள் 

 37. சிராத்தத்தில் தூய்மையாக இருக்க வேண்டிய ஐந்து 

 38. சிராத்தத்தில் முக்கியமான ஏழு பொருட்கள்: 

 39. சிராத்தத்தில் போக்தாவின்(சாப்பிடுபவரின்) தகுதி?

 40. சாப்பிடுவதற்கு தகுதியுள்ள நபர் கிடைக்காத போது

 41. உறவினரை சிராத்தத்தில் சாப்பிடச்சோல்லலாமா? 

 42. சாப்பிடுபவரின் நியமங்கள்-கட்டுப்பாடுகள் 

 43. சாப்பிடும் இருவரில் ஒருவர் தேவர்-மற்றவர் 

 44. சிரராத்தம் செய்பவர் இருக்கும் நிலை 

 45. சிராத்தத்தை வேறு நாளில் செய்யலாமா? 

 46. அண்ணன்-தம்பி தனித்தனியே சிராத்தம் செய்ய வேண்டுமா?

 47. சிராத்தம்-எவ்வாறு பித்ருக்களை சென்றடைகிறது?

 48. இறந்தவர் வேறு பிறவியில் இருந்தால்? 

 49. மந்திரத்தை ஸரியாக உச்சரிக்க வேண்டும்: 

 50. காற்று வடிவில் சாப்பிடும் பித்ருக்கள் 

 51. பிராஹ்மணர்களின் கால்களை அலம்புதல்? 

 52. ச்ராத்த ஸமையலில் கட்டுப்பாடுகள்:

 53. சாப்பிட்ட (எச்சில்) இடத்தை சுத்தப்படுத்துதல்?

 54. ஒரே நாளில் இரண்டு தர்ப்பணம் செயலாமா?

 55. அசுத்தி வந்து விட்டால் சிராத்தம் எப்போது? 

 56. காசிராமேஸ்வரம் போன்ற க்ஷேத்ரங்களில் ச்ராத்தம் செயலாமா?

 57. தீர்த்த ச்ராத்தம் என்றால் என்ன ?

 58. மஹாளய பக்ஷம்-தினஸரி ஒவ்வொரு பலன்

 59. பதிவிரதைப் பெண்ணுக்கு என ஒரு நாள் 

 60. பித்ரு கர்மா ஜாதக தோஷத்தை போக்கும்

 61. தர்ப்பணம் செவதால் நவகிரஹங்களின் அருள் 

 62. பிள்ளைகள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை 

 63. பித்ருக்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன்கள்

 64. இறந்தவரின் அருளால் நமக்குக் கிட்டும் பலன்கள்

Contact Us

vaidikasri@gmail.com

Alwarpet, Chennai

+91 44 2436 1210 / 1211

© 2020 Copyright Vaithikasri