Publications - பால போதினீ பாகம் - 2

சின்னஞ் சிறியக் கதைகள் மூலம் மிகப்பெரிய கருத்துக்களைக்கூட ஸுலபமாக மனதில் பதிய வைக்க முடியும் என்பதை நமக்குக் கற்றுத் தந்தவை நமது கலாசாரப் பொக்கிஷங்களான ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹாபாரதம் போன்ற ஆன்மிக இலக்கியங்கள், 

முன்காலத்தில் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டிவிடும் போதும் சிறுவர்களைத் தூங்கவைக்கும் ஸமயத்திலும் பிரயாணத்தின் போதும், என அவ்வப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கருத்தாற்றலுள்ள சிறிய கதைகளை ச் சொல்லியே தன் குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்தார்கள்.

இன்றைய சூழ்நிலையில் ஏராளமானக் கதைகள் ஸமூஹத்தில் உலாவருகின்றன, ஆனாலும் ஆன்மிக அடிப்படையில் -வேதசாஸ்த்ரக் கருத்துக்களின் அடிப்படையில்- கதைகள் மிகக் குறைவு,

நம் முன்னோர்கள் கையாண்டு வந்த -சொல்லி வந்த- பற்பலக் கதைகள் காலப்போக்கில் மறைந்து அல்லது மாற்றப்பட்டு- விட்டன, கதைகளில் மாற்றம் செய்வது தவறில்லை என்றாலும் கருத்துக்களை அப்படியே சொல்வதில் ஓர் மகிழ்ச்சி உள்ளது 

இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் ஆஸ்திகத்தையும்-  இறை நம்பிக்கையையும்-- நம து வேதம் சாஸ்த்ரம் புராணம் கலாசாரம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன

கதைகள் அளவில் மிகப்பெரியதாக இருப்பின், அது நாவலாக ஆகிவிடும், அதன் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்வது சிறுவர்களுக்குக் கடினம், ஆகவேசிறிய கதைகளாக ஸுமார் இரண்டு மூன்று பக்கங்களுக்கு மிகாமல் வைதிகஸ்ரீ மூலம் கடந்த 15 வருஷங்களாக வெளியிட்டுள்ளோம், அதன் தொகுப்பாகவே தற்சமயம் பாலபோதினீ  (சிறுவர்களுக்கான கதைகள்) என்னும் புஸ்தகத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தைப்போலவே கதைகளுக்குத்தக்க (திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான) அழகான படங்களுடன் வெளியிடப்படுகிறது. 

யூ ட்யூப்பிலும் மாதுஸ்ரீ அன்னபூரணி மாமி அவர்கள் இந்தக் கதைகளை அழகாக நேரடியாக விவரித்துச் சொல்ல்லி வருகிறார்கள்.  இந்தக் கதைகளை சிறுவர்களை விட்டு படிக்க செய்தும் அவர்களுக்கு புரியும்படி பெரியோர்கள் எடுத்து விவரித்தும் வருங்கால பாரதத்தின் தூண்களாகக் கருதப்படும் நம் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக- நல்ல மணமும் குணமும் உள்ளவர்களாக- தைரியமுள்ளவர்களாக உறுவாக்க முயற்சிக்கலாம்,

அம்மா அப்பா தாத்தா பாட்டி அத்தை போன்ற பெரியோர்களும் இந்தக் கதைகளை பலமுறைப் படித்து, கதைகளின் கருத்துக்களை அறிந்து தெளிவடைந்து செயலாற்ற முயற்சிக்க வேண்டும், இதற்கு ஸ்ரீ பகவான் நமக்கு நல்லது அளித்து அருள் புரியட்டும் ஆஸ்திக அன்பர்கள் இந்த புஸ்தகத்தைப் படித்து நன்மையடைய ஸ்ரீ பகவானை பிரார்திக்கிறேன்.

நன்னிலம் வை.ராஜகோபால கனபாடிகள்
(ஆசிரியர்-வைதிகஸ்ரீ:)

Contact Us

vaidikasri@gmail.com

Alwarpet, Chennai

+91 44 2436 1210 / 1211

© 2020 Copyright Vaithikasri