தர்ம சாஸ்திரம் தமிழ் part-5

In this book this type of Clarifications Sastra  More Then 220 Subjects

கூடாது கூடாது கூடாது

 • பிறவி முதல் மரணம் வரையில் மனிதன் எந்தெந்த பொருளுடன் / ஜீவனுடன் தொடர்பு கொள்கிறானோ மற்றும் எந்தெந்த செயலைச் செய்கிறானோ (பாரத கலாச்சாரத்திலுள்ள)அவை அனைத்தும் தொலை நோக்கு பார்வையுடைய நமது முன்னோர்களான மஹர்ஷிகளால் விக்ஞான நோக்கத்துடன் சீர்திருத்தப்பட்டு ஸரி செய்யப்பட்டுள்ளது, இதைத்தான் பகவான் கிருஷ்ணரும் கீதையில் தெளிவாகக் கூறுகிறார்.
  ய: ஶாஸ்திர விதி4 முத்ஸ்ருஜ்ய வர்தந்தே காமசாரத:
  ந ஸ ஸித்தி4மவாப்நோதி ந ஸுக2ம் ந பராம் க3திம் (16-23,24)
  தஸ்மாத் ஶாஸ்திரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்தி2தௌ
  க்ஞாத்வா ஶாஸ்திர விதா4நோக்தம் கர்ம கர்து மிஹார்ஹஸி


 • எந்த மனிதன் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நியமங்களை விட்டு விட்டு, மனம் போனபடி செயல்படுகிறானோ,? அவன் ஸித்தியை (மனஸ் ஸித்தியை) அடைவதில்லை, ஆகவே செய்யலாம் செய்யக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் சாஸ்திரம் தான் பிரமாணம்,


 • இதைத் தெரிந்து கொண்டு இந்த உலகில் சாஸ்திர நியமப்படி செய்ய வேண்டிய செயல்களைச்செய், (சாஸ்திரவிதிகளையனுஸரித்து செய்ய வேண்டியவைகளைச்செய்ய வேண்டும்), என்கிறார். இதன் தாத்பரியம், எது செய்யலாம்? எது செய்யக்கூடாது? என்று தீர்மானிப்பதில் சாஸ்திரத்தையே பிரமாணமாகக் கொள்ள வேண்டும் என்பதே. மேலும் கீதையில் பகவான் இவ்வாறு தனது மனம் போன போக்கில் செயலைச் செய்கிறவனை அஸுரன் என்றும் கூறுகிறார்,


 • ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா : ந விது3 ராஸுரா: மேலும்
  சாஸ்திராணி யத்ர க3ச்சந்தி தத்ர க3ச்ச2ந்தி தே நரா:
  மதயோ யத்ர க3ச்ச2ந்தி தத்ர க3ச்ச2ந்தி வாநரா:\\


 • யார் (தர்ம) சாஸ்திரப்படி தனது செயல்களைச் செய்கிறானோ அவன் நரன் (மனிதன்), தனது மனம் போன போக்கில் செயல்களைச் செய்பவன் வாநரன் (குரங்கு). என்கிறது பெரியோர்களின் வாக்கு.


 • இந்தக் காலத்தில் மக்களுக்கு ஸரியான போதனை, சேர்க்கை , மற்றும் ஸரியாகச் சொல்பவர் இல்லாத காரணத்தால் ஸமூகத்தில் கட்டுப்பாடு மிகவும் தளர்ந்து விட்டது, சாஸ்திரப்படி எதைச்செய்யலாம் எதைச் செய்யக்கூடாது எனபதை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்வதில்லை, தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இல்லை,


 • இதனால் நமது பற்பல தர்மங்களும் அவற்றைத் தெரிவிக்கும் (தர்ம) சாஸ்திர புஸ்தகங்களும் பெரும்பாலும் மறைந்து விட்டன. இருக்கும் சில புஸ்தகங்களையும் படிப்பவர் மிகச் சிலரே, பலருக்கு படிக்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும் அதற்கான ஸந்தர்பமும் ஸமயமும் கிடைப்பதில்லை, சாஸ்திரங்களை அறிந்தவர்கள் அதை மற்றவருக்குச் சொல்பவர்கள், அதைக்கேட்பவர்கள், ஆசரிப்பவர்கள் ஆகிய ஸத்புருஷர்கள் மிகவும் துர்லபமாகி வருகிறார்கள்,


 • இந்தச் சூழ்நிலையில் தர்மசாஸ்திர ஆசாரத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு வைதிகஸ்ரீ மூலம் தர்மசாஸ்திர புஸ்தகங்கள் முன்பு இரண்டு பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன, தற்சமயம் தொடர்ந்து மூன்றாவது பாகமும் வெளியிடப்படுகிறது, இதன் மூலம் தர்ம சாஸ்திரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் முக்கியமான சிலவற்றையாவது தெரிந்து கொள்ள முடியும் .
  தர்ம சாஸ்திரம் ஸமுத்திரம் போன்று மிக ஆழமானது, தற்காலத்தில் கிடைக்கும் சில தர்ம சாஸ்திர புஸ்தகங்களையும் ஆசாரத்தையும் பார்த்து எங்களது அளவான சக்தி, யோக்கியதை, அறிவு, நேரம், ஆகியவற்றை அனுஸரித்து இந்த புஸ்தகங்கள் எழுதப்பட்டுள்ளன,


 • இவற்றைப் படிப்பவர்களுக்கு ஒரு சில செயல்கள் (தற்கால சூழ்நிலைப்படி) செய்ய இயலாதவைகளாகத் தோன்றலாம், ஆனாலும் இந்த விஷயங்களில் சாஸ்திரம் என்ன சொல்கிறது? என்று தெரிந்து கொண்டாலே அதை நாம் செயல்படுத்தும் சூழ்நிலை நிஸ்சயம் தோன்றும்,


 • வாசகர்கள் இந்த தர்மசாஸ்திர புஸ்தகங்களை நன்கு படித்து இதில் உள்ள சாஸ்திர விதிகளை தனது வாழ்க்கையில் நடைமுறைபடுத்தி நன்மையை அடைய - முயற்சிக்க - ஸ்ரீ பகவான் அனுக்ரஹிக்கட்டும்.

 • நம் வீட்டுக்கு வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நன்பர்களுக்கு அன்பளிப்பளிக்கவோ பரிசளிக்கவோ மிகச்சிறந்த புஸ்தகம்