Description
மாதரின் மஹிமைகள்
ஆன்மீகத்தில் மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்தி நேர் வழியில் அழைத்துச் செல்வதில் நன்மொழிகள் எனப்படும் ஸுபாஷிதங்களுக்குத் தனி கௌரவம் உண்டு. ஒரு நண்பனைப்போன்று அன்பான மனைவியைப் போன்று நமக்குத் தேவையான நேரங்களில் தேவையான ஆலோசனைகளை தேவையான மனிதர்களுக்கு தேவையான அளவில் தருபவைகள் நன்மொழிகள் என்னும் ஸுபாஷிதங்கள்தான் . நமது வேதங்களிலும் ஸ்த்ரங்களிலும் அமைந்துள்ள நமது வாழ்க்கைக்குத்தேவையான பற்பல நல்ல கருத்துக்கள், அனைத்துமக்களையும் , குறிப்பாககுழந்தைகளையும் இளம் வயதினர்களையும் சென்றடைய வேண்டும் என்னும் உயர்வான நோக்கத்தோடு, வேத சாஸ்த்ரக்கருத்துக்களை தனது அனுபவங்களால் ஏற்பட்ட உண்மைகளை ஒரு மனிதன் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டு நல்லவனாக வல்லவனாக எப்படி வாழ வேண்டும் என்னும் கருத்துக்களை, எளிமையான உதாஹரணங்களுடன் கூட நன்மொழிகளை நமக்குத் தொகுத்தளித்துள்ள மஹர்ஷிகள் மிகவும் போற்றத்தக்கவர்கள். ஒவ்வொரு ஸுபாஷிதமும் ஒவ்வொரு ரத்னங்களைப்போன்று ஜ்வலிப்பவை. மனதிலுள்ள அக்ஞானம் (அறியாமை) என்னும் இருளை ஸுபாஷிதம் என்னும் ஜ்வாலையால் (தீபத்தால்) போக்கடிக்க முடியும் .
- ஒருவன் கற்றவனாக அறிவாளியாக இருந்தாலும் கூட உலக மக்களிடத்தில் எவ்வாறு நெருங்கிப் பழகுவது? அனைவருக்கும் ப்ரியமானவராக வாழ்வது எப்படி?
- தெஎவங்களால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட இயற்கைகளால் நமக்கு என்ன உதவி?
- மனிதன் ஸுகமாக வாழ எந்தெந்த நேரங்களில் என்னென்ன செய்ய வேண்டும்?
- பணக்காரனாக வாழ வழி என்ன ?
- போன்ற வாழ்க்கை முறையை அவனுக்கு உணர்த்துவது நன்மொழிகள் தான்.
அனைத்து மொழிகளிலும் (இலக்கியங்களிலும்) நன்மொழிகள் பற்பல இருந்தாலும் ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் அமைந்துள்ள ஸுபாஷிதங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. அவற்றை நாம் தமிழில் மொழி பெயர்த்துத் தெரிந்து கொண்டாலும் கூட அவைகளை அந்த பாஷையிலேயே படித்து உணர்ந்தால்தான் அவற்றின் உண்மையான க்கருத்துக்களை நாம் முழுமையாக உணர முடியும். இருந்தாலும் ஸம்ஸ்க்ருத பாஷை தெரியாதவர்களும் கூட, இவற்றை ஓரளவு அறிந்து கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே பற் பல நூல்களில் அமைந்துள்ள ஏராலமான நன்மொழிகளுக்குள், மிக முக்கியமானநன்மொழிகளை மட்டும் தொகுத்து வைதிகஸ்ரீ மாத இதழில் வெளியிட்டு வருகின்றோம். அவற்றின் தொகுப்புகளாகவே இந்த நூல் வெளியிடப்படுகிறது. இந்த புஸ்தகத்தை முழுமையாகப் படித்து முடிப்பவர்களுக்கு அவர்களையும் அறியாமல் ஸம்ஸ்க்ருதப் புலமை ஏற்பட்டு விடும். ஆகவே இந்த புச்தகத்தை அனைவரும் படித்து பயனடைந்து, குழந்தைகளுக்கு இந்த நன்மொழிகளை கற்றுத்தந்து, முடிந்தால் தனது வாழ்க்கையிலும் செயல்படுத்தி, நல்வாழ்க்கையை அமைத்துக்கொண்டு நமது பாரம்பர்யத்தையும் கலாச்சாரத்தையும் பேணி பாதுகாத்து நன்மையை அடைவோம்.
மாதரின் மஹிமைகள்
About the Author
Nannilam Brahmasri V. Rajagopala Ganapatigal, is a Nitya Agnihotri( performing yagnam on a daily basis ) and a Salakshana Ganapatee, Editor of the Spiritual Magazine “VAITHIKASRI”, publisher of many books on Dharma Sastras and a renowned Vedic Scholar and a proficient Lecturer on Ramayana, Bhagavatha, Mahabharatha puranas. To know more about the author – Click here .
Reviews
There are no reviews yet.