ஒவ்வொருவரும் பெற்றோர் ஜீவதசையில்(உயிருடன்) இருக்கும் போதும் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாது செய்ய வேண்டும், ஆனாலும் பெற்றோர் உயிருடன் இருக்கும் போது, பிள்ளைகள்தான் அவர்களை போஷிக்க வேண்டும் என்பதில்லை, அவர் தானாகவே தன்னைக் காப்பாற்றிக்கொள்வார், அல்லது மற்ற உறவினர்கள் நண்பர்கள் முதலியவர்களாலும் காப்பாற்றப்பட்டு விடுவார்,
ஆனால் பெற்றோர் இறந்த பின்னர் பித்ருக்களாக மாறிய அவருக்கு பெற்ற பிள்ளைகள்தான், முறையாக சிராத்தம் தர்ப்பணம் செது உணவளித்து பசி தாஹத்தைப் போக்க வேண்டும். யாரோ ஒருவருக்காக (ரத்த ஸம்பந்தமில்லாத) யாரோ ஒருவர் சிராத்தம் தர்ப்பணம் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கவில்லை,
ஆகவே பிள்ளைகள், பெற்றோர் மனிதராக இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்குச் செய்யும் பணிவிடையை விட பெற்றோர் இறந்த (பித்ருக்களான) பின்பு செய்ய வேண்டிய சிராத்தம் தர்ப்பணம் போன்ற கடமைகளை கட்டாயம் செய்ய வேண்டும்.